துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விளம்பர ஸ்டிக்கர்களால் பாஸ்போர்ட்டை சிதைக்கும் பயண முகவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியர்களை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், பல நேர்மையற்ற பயண முகவர்கள் இந்திய பாஸ்போர்ட்களை விளம்பர தளமாக பயன்படுத்தியுள்ளனர் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் “அவர்கள் தங்கள் ஏஜென்சி/நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டுவதன் மூலம் பாஸ்போர்ட்டின் அட்டையை சிதைத்துள்ளனர்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படிச் செய்வது இந்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறுவதாகும் என்றும் இது சம்பந்தமாக, தூதரகம் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை எந்த நேரத்திலும் பயண முகவர்கள் அல்லது வேறு எந்த நபர் அல்லது நிறுவனத்தால் தங்கள் பாஸ்போர்ட்களை சிதைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.