ADVERTISEMENT

UAE கொரோனா அப்டேட் (ஏப்ரல் 6, 2020) : பாதிக்கப்பட்டோர் 277 பேர்..!!! மொத்த எண்ணிக்கை 2,076 பேர்..!!! ஒருவர் பலி..!!!

Published: 6 Apr 2020, 1:21 PM |
Updated: 6 Apr 2020, 1:47 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் திங்கள்கிழமை (ஏப்ரல் 6,2020) புதிதாக 277 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,076 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக ஒருவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

 

மேலும், இன்றைய நாளில் மட்டும் 23 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT