ADVERTISEMENT

UAE கொரோனா அப்டேட் (ஏப்ரல் 8, 2020) : பாதிக்கப்பட்டோர் 300 பேர்..!!! மொத்த எண்ணிக்கை 2,659 பேர்..!!!

Published: 8 Apr 2020, 1:38 PM |
Updated: 8 Apr 2020, 1:42 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 8, 2020) புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,659 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

மேலும், இன்றைய நாளில் மட்டும் 53 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 239 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், செவ்வாய்க்கிழமை வரை நாடு முழுவதும் மொத்தம் 5,93,095 கொரோனா வைரஸ் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT