ADVERTISEMENT

துபாயில் நடக்கும் சுத்திகரிப்பு திட்டத்தையொட்டி ‘இலவச பார்க்கிங்’ மேலும் நீட்டிப்பு..!!! RTA தகவல்..!!!

Published: 11 Apr 2020, 4:52 AM |
Updated: 11 Apr 2020, 4:54 AM |
Posted By: jesmi

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாயில் சாலையோரங்களில் இருக்கக்கூடிய கார் பார்க்கிங் மற்றும் மல்டி ஸ்டோரி பார்க்கிங் ஆகிய அனைத்திற்கும் மார்ச் 31, 2020 முதல் ஏப்ரல் 13, 2020 வரை, இரண்டு வாரங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என ஏற்கெனவே அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஏப்ரல் 13 ம் தேதி முடியவுள்ள இந்த திட்டமானது மேலும் நீட்டிக்கப்படுவதாக RTA செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸிற்கான சுத்திகரிப்பு திட்டத்தின் போது மக்களை ஆதரிக்கும் வண்ணம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இது அரசாங்கத்தின் தொலைதூர வேலை முயற்சி (Remote Working System) மற்றும் பொதுமக்களை வீட்டிலேயே இருக்க வேண்டும் (Stay Home) என்ற அரசின் கட்டளையை பொதுமக்கள் கடைபிடிக்க ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT