ADVERTISEMENT

துபாய் சுகாதார ஆணையத்தின் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா..!! துபாய் மன்னர் அறிவிப்பு..!!

Published: 13 May 2020, 6:29 PM |
Updated: 13 May 2020, 6:31 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், துபாய் சுகாதார ஆணையத்தின் சுகாதார ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான ‘கோல்டன் விசா’ வழங்கப்படும் என்று இன்று அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் முன் வரிசையில் நின்று கொரோனா பாதித்தவர்களுக்கு நேரடியா மருத்துவ சேவைகள் வழங்கக்கூடிய மருத்துவ நிபுணர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விசா வழங்கப்படும் என்று மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

கோல்டன் விசா என்பது அமீரகத்தில் முக்கிய துறைகளில் பங்களிக்க கூடிய வெளிநாட்டவர்களுக்கு அமீரக அரசால் வழங்கக்கூடிய 10 ஆண்டுகளுக்கான விசா என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT