ADVERTISEMENT

UAE: குடும்ப உறுப்பினர்களுக்கு விசா ஸ்பான்சர் செய்ய குறைந்தபட்ச சம்பளம் 10,000 திர்ஹம்ஸ்..!! புதிய அறிவிப்பை வெளியிட்ட அரசு..

Published: 1 Mar 2023, 7:10 PM |
Updated: 1 Mar 2023, 7:31 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஸ்பான்சர் செய்ய விரும்பினால் அவர்களுக்குண்டான விதிமுறைகள் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றானது தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் கீழ் அமீரகத்தில் வசிக்கும் ஒரு நபர் ரெசிடென்ஸ் விசாவில் ஐந்து உறவினர்களுக்கு ஸ்பான்சர் செய்ய விரும்பினால் அவருக்கு குறைந்தபட்ச மாத சம்பளம் 10,000 திர்ஹம்ஸாக இருக்க வேண்டும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் தலைவர் அலி முகமது அல் ஷம்சி அவர்கள், அக்டோபர் 3, 2022 அன்று நடைமுறைப்படுத்தப்பட்ட அமைச்சரவை தீர்மானம் எண். 65 இன் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக இதற்கான தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்து வரும் குடும்பத்தினர் தங்குவதற்கு போதுமான வீட்டு வதசி இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் ஆறு உறவினர்களுக்கு ஸ்பான்சர் செய்யத் திட்டமிடுபவர்கள் குறைந்தபட்சம் 15,000 திர்ஹம் அதிக சம்பளம் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் 6 க்கும் மேற்பட்ட உறவினர்களுக்கான விண்ணப்பங்களை அதிகாரி மதிப்பாய்வு செய்வார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.