ADVERTISEMENT

அமீரகவாசிகள் வெளிநாடு பயணம் செல்ல அரசு அனுமதி..!! நாடுகள் மற்றும் வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்..!!

Published: 16 Jun 2020, 8:37 AM |
Updated: 16 Jun 2020, 8:40 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அமீரகத்தில் உள்ள வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (MOFAIC), அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய அதிகாரசபை (ICA) மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) ஆகியவை ஒருங்கிணைந்து அமீரகத்தில் வசிக்கும் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பின்படி, வருகின்ற ஜூன் மாதம் 23 ம் தேதி முதல் அமீரகத்தின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்ட சில வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணம் மேற்கொள்ள இருக்கும் அமீரக வாழ் மக்களுக்கான நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பயணம் மேற்கொள்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் விபரங்களும் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, பயணிகளுக்கு பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பயணம் செய்யும் போது கட்டாயம் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்போது அமீரகத்தில் நடைமுறையில் உள்ள வெற்றிகரமான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சமீபத்திய கொரோனாவிற்கெதிரான முன்னேற்றங்கள் ஆகியவற்றின் முழுமையான மதிப்பீடுகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.