ADVERTISEMENT

துபாயில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழை.. விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு காவல்துறை வெளியிட்ட அறிவுரை..!!

Published: 26 Oct 2023, 7:54 PM |
Updated: 26 Oct 2023, 8:56 PM |
Posted By: Menaka

துபாயில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், துபாய் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் மற்றும் வரும் பயணிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மெட்ரோவை பயன்படுத்துமாறு துபாய் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

துபாயில் இன்று வியாழக்கிழமை, அக்டோபர் 26ம் தேதி எமிரேட்டின் பரவலான பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், துபாய் காவல்துறை சமூக ஊடகங்களில் இது குறித்த எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது.

அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களைச் சுற்றிலும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, ஷார்ஜாவின் நுழைவாயிலில் உள்ள ஷேக் முகமது பின் சையத் சாலையில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து தாமதம் ஏற்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எச்சரித்துள்ளது.

ஆகவே, மழைநேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வாகன ஓட்டிகள் விமான நிலைய சாலையில் செல்வதற்குப் பதிலாக மாற்று வழிகளாக அல் கைல் சாலை, எமிரேட்ஸ் சாலை மற்றும் ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் செயின்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் எனவும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel