ADVERTISEMENT

UAE: குடியிருப்பாளர்கள் நாளை ரமலான் பிறையை பார்க்குமாறு பிறை பார்க்கும் கமிட்டி அறிவுறுத்தல்..!!

Published: 9 Mar 2024, 2:13 PM |
Updated: 9 Mar 2024, 2:19 PM |
Posted By: Menaka

ரமலான் மாதம் துவங்க இன்னும் ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில் இஸ்லாமிய சமூகத்தினர் புனித ரமலான் மாதத் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை நிலவைக் காண்பதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு, நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை பிறையை எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது. அத்துடன், அமீரகத்தில் பிறையை பார்க்கும் நபர்கள் 026921166 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வானியல் கணக்கீடுகளின் படி, அமீரகத்தில் இந்த ஆண்டிற்கான ரமலான் பிறை மார்ச் 10, 2024 அன்று காட்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பிறை தென்பட்டால் தற்போதைய ஷாபான் மாதத்தின் 29ஆம் தேதியை அடுத்து ரமலான் மாதம் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அமீரகத்தை போன்றே, சவூதி அரேபியாவிலும் இருக்கக்கூடிய பிறை பார்க்கும் குழு, மார்ச் 10, ஞாயிற்றுக்கிழமை மாலை, ரமலான் பிறையைப் பார்க்கலாம் என்று குடியிருப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT