ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று துவங்கிய ரமலான்.. வாழ்த்துகளைப் பகிர்ந்த அமீரக தலைவர்கள்..!!

Published: 11 Mar 2024, 10:37 AM |
Updated: 11 Mar 2024, 10:39 AM |
Posted By: Menaka

அமீரகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வானில் ரமலான் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, இன்று மார்ச் 11 (திங்கட்கிழமை) புனித ரமலான் மாதத்தின் முதல் நாள் தொடங்குவதாக அரசு அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பு வெளியானதும், அமீரகத் தலைவர்கள் பலரும் சமூக ஊடகங்கள் வழியாக அமீரகக் குடியிருப்பாளர்களுக்கும் இஸ்லாமியப் பெருமக்களுக்கும் ரமலான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்து அமீரக ஜனாதிபதி X தளத்தில் பதிவிட்ட இடுகையில், “ரமலான் மாதம் தொடங்கும் நிலையில், புனித மாதத்தைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், “சிந்தித்தல் மற்றும் பிரார்த்தனையின் இந்த காலகட்டம் எங்களை நெருக்கமாக கொண்டு வரட்டும் மற்றும் நமது ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியால் நிரப்பப்பட்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் வாழ்த்துக்கள்.” என்றும் அவர் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அவரைப் போலவே, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் X தளத்தில் தனது ரமலான் வாழ்த்துகளைக் கூறியுள்ளார். புனித மாதத்தின் தொடக்கத்தில் நாட்டு மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட ஷேக் முகமது, “நமது சமூகங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், நமது குடும்ப உறவுகளைப் புதுப்பிக்கவும், அதே போல் நன்மதிப்பு மற்றும் நன்கொடை வழங்கும் எண்ணத்தை நமக்குள் வளர்ப்பதற்கும் ரமலான் ஒரு வாய்ப்பாகும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் அவரது பதிவில், “ரமலான் மாதம் தொழுகை மற்றும் நோன்பின் மாதம் மட்டுமல்ல… இஸ்லாமியர்களிடையே அன்பும், அமைதியும், ஒற்றுமையும் நிலவும் மாதம்” என்றும் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel