ADVERTISEMENT

UAE: ரமலானை முன்னிட்டு பார்க்கிங், டோல் கேட் கட்டண நேரங்களில் மாற்றம் இருக்குமா..?? தகவலை வெளியிட்ட அபுதாபி..

Published: 12 Mar 2024, 8:24 PM |
Updated: 12 Mar 2024, 8:24 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு வேலை நேரம், பள்ளி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, புனித மாதத்தில் தராவீஹ் போன்ற சிறப்பு ரமலான் தொழுகைகள், இஃப்தார் மற்றும் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறும் என்பதால், அவற்றைக் கருத்தில்கொண்டு ஊழியர்களுக்கான வேலை நேரம் உள்ளிட்ட பல்வேறு சேவை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

அந்தவகையில், அமீரகத்தின் தலைநகரான அபுதாபியிலும் பேருந்து சேவைகள், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற பொது இடங்கள் செயல்படும் நேரங்களுடன் பார்க்கிங் நேரம், கட்டணம் செலுத்தும் நேரம் ஆகியவற்றையும் அதிகாரிகள் மாற்றியமைத்துள்ளனர். அவ்வாறு அபுதாபியில் ரமலான் மாதத்தில் மாற்றப்பட்ட சேவைகளின் நேரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

பார்க்கிங் நேரம்:

ஞாயிற்றுக்கிழமைகளில், பார்க்கிங் வழக்கம் போல் இலவசம். அதேசமயம், திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

ADVERTISEMENT

டோல் கேட் நேரங்கள்:

ரமலான் மாதம் முழுவதும் பீக் ஹவர்ஸில் டார்ப் (Darb) டோல் கேட் அமைப்பு செயல்படுத்தப்படும். காலை வேளைகளில் டோல்கேட் காலை 8 மணி முதல் 10 மணி வரை செயல்படும். அதேபோல், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் வாகன ஓட்டிகள் இலவசமாக கடந்து செல்லலாம்.

பொது பேருந்து அட்டவணை

அபுதாபி எக்ஸ்பிரஸ் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சேவை காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும். இருப்பினும், அபுதாபி லிங்க் போக்குவரத்து சேவைகள் வாரம் முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள்:

ரமலான் மாதத்தில் அபுதாபியில் உள்ள பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளின் இயக்க நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பின் படி, எமிரேட்டில் உள்ள பூங்காக்கள் வார நாட்களில், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும்,  சனி, ஞாயிறு மற்றும் உத்தியோகபூர்வ விடுமுறை நாட்களில், காலை 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலும் திறந்திருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

அதேநேரத்தில், அபுதாபி முழுவதும் உள்ள கடற்கரைகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும். அத்துடன் காலை 6 மணி முதல் சூரியன் மறையும் வரை நீச்சல் அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel