ADVERTISEMENT

அபுதாபியில் இயங்கி வந்த உணவகத்தை மூட உத்தரவிட்ட உணவு பாதுகாப்பு ஆணையம்..!!

Published: 19 Mar 2024, 2:13 PM |
Updated: 19 Mar 2024, 2:13 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள உணவகம் ஒன்று குடியிருப்பாளர்களின் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக, அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையத்தால் (ADAFSA) மூடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் CN-1038631 என்ற வர்த்தக உரிமத்தை வைத்திருந்த அல் நிதாம் எனும் பெயரில் இயங்கிவந்த அந்த உணவகத்தை நிர்வாக ரீதியாக மூடுவதற்கு அபுதாபியின் உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து தற்போது மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ADAFSA வெளியிட்ட அறிக்கையில், இந்த உணவகம் ஐக்கிய அரபு அமீரகத்தின் உணவு பாதுகாப்பு தொடர்பான 2008 இன் சட்ட எண் (2) மற்றும் அதனுடன் தொடர்புடைய அபுதாபியின் சட்டத்தை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபியில் இது போன்று உணவு பாதுகாப்புகளை மீறுவது, குடியிருப்பாளர்கள் மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வது போன்ற செயல்களுக்கு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை அபுதாபி உணவு பாதுகாப்பு ஆணையம் எடுத்து வருகிறது.

ADVERTISEMENT

மேலும், அபுதாபியில் இயங்கும் உணவகங்கள், கஃபேக்கள் போன்றவற்றின் சமைக்கும் இடங்கள் மற்றும் பொதுமக்கள் உணவருந்தும் பகுதிகளில் பின்பற்றப்படும் சுகாதாரத்தை மதிப்பீட்டு, அதனை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பொதுவெளியிலும் உணவு பாதுகாப்பு ஆணையம் ஒட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel