ADVERTISEMENT

குவைத் கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 28, 2020) : பாதிக்கப்பட்டோர் 633 பேர்..!! குணமடைந்தோர் 798 பேர்..!!

Published: 28 Aug 2020, 2:18 PM |
Updated: 28 Aug 2020, 2:18 PM |
Posted By: admin

குவைத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 28, 2020) புதிதாக 633 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குவைத்தின் சுகாதார அமைச்சகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குவைத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 83,578 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

குவைத்தில் கொரோனாவிற்கு 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால் குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 798 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 75,320 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT