ADVERTISEMENT

UAE லிருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்காக குறைந்த கட்டணத்தில் கொரோனா சோதனை..!! ஏர் இந்தியா, ஏர் அரேபியா NMC யுடன் ஒப்பந்தம்..!!

Published: 7 Sep 2020, 11:54 AM |
Updated: 7 Sep 2020, 11:54 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் கொரோனாவிற்கான சோதனைகளை மலிவு விலையில் மேற்கொள்ள அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு விமானங்களை இயக்கம் ஏர் அரேபியா, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமான நிறுவனங்கள் அமீரகத்தில் இருக்கும் NMC ஹெல்த்கேர் நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை அறிவித்துள்ளன. இந்த மூன்று விமான நிறுவனங்களின் மூலம் இயக்கப்படும் விமானங்களில் பயணிக்க இருக்கும் பயணிகள் தற்பொழுது கொரோனாவிற்கான RT-PCR சோதனையை குறைந்த விலையில் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஒப்பந்தத்தின் மூலம் NMC மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் 150 திர்ஹமிற்கு PCR சோதனை செய்ய முடியும் என்றும் வீட்டில் இருந்தே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 190 திர்ஹம் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு சுகாதார மையங்களிலும் இதே சோதனை 300 திர்ஹம் அல்லது அதற்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சில சுகாதார மையங்கள் வீட்டு சோதனைக்கு 400 திர்ஹம் கட்டணம் வசூலிக்கின்றன.

துபாயில் இருக்கும் நான்கு NMC மருத்துவ மையங்கள், ஷார்ஜாவில் இருக்கும் எட்டு NMC மருத்துவ மையங்கள் மற்றும் அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமாவில் தலா ஒரு மருத்துவ மையம் தற்போது ஏர் அரேபியா, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு இந்த சிறப்பு சலுகையை வழங்குவதாக NMC ஹெல்த்கேர் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த சிறப்பு சலுகையைப் பெற பயணிகள் தங்களுக்கு அருகிலுள்ள NMC ஹெல்த்கேர் சென்று தங்களின் விமான டிக்கெட் மற்றும் ID Proof (எமிரேட்ஸ் ஐடி அல்லது பாஸ்போர்ட்) ஆகியவற்றைக் காட்டி கொரோனா சோதனைக்கான கட்டணத்தை செலுத்தி சோதனை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த படியே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விரும்புபவர்கள் 600555669 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அப்பாய்ண்ட்மெண்ட் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா சோதனைக்கான ரிசல்ட் SMS மற்றும் EMAIL மூலமாக 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT