ADVERTISEMENT

அமீரகத்தில் தினமும் உயரும் கொரோனா தொற்று..!! இன்று வெள்ளிக்கிழமை புதியதாக 931 பேர் பாதிப்பு..!!

Published: 11 Sep 2020, 10:45 AM |
Updated: 11 Sep 2020, 10:45 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2020) புதிதாக 931 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 77,842 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 398 ஆகவே தொடர்கிறது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 517 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 68,462 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT