ADVERTISEMENT

UAE : காலாவதியான விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு ஓவர்ஸ்டே அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு..!!

Published: 12 Sep 2020, 10:16 AM |
Updated: 12 Sep 2020, 12:47 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு காலாவதியாகி இருக்கும் விசிட் மற்றும் சுற்றுலா விசா வைத்திருக்கும் நபர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரையிலும் விசா நீட்டிக்கப்படும் என அமைச்சரவை அறிவித்திருந்த முடிவை ரத்து செய்து ஜூலை 12 ஆம் தேதியிலிருந்து ஒரு மாத காலம் சலுகை கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 11 ம் தேதியில் இருந்து மேலும் ஒரு மாதம் சலுகை காலம் கொடுக்கப்பட்டது. இந்த சலுகை காலத்திற்குள் காலாவதியான விசிட் விசா வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது தங்களின் விசா நிலையை மாற்ற வேண்டும் எனவும் ICA அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், அமீரக அரசு அறிவித்திருந்த சலுகை காலம் முடிவடைந்ததையொட்டி மார்ச் 1 ம் தேதிக்குப் பிறகு காலாவதியான விசிட் விசாக்களை வைத்திருந்து விசாவை நீட்டிக்காமலும் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறாமலும் இருக்கும் நபர்களுக்கு செப்டம்பர் 11 முதல் ஓவர்ஸ்டே அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமர் கால் சென்டர் ஏஜென்ட் ஒருவர் கூறுகையில், காலாவதியான விசிட் விசாவிற்கான சலுகை காலம் முடிந்தும் அமீரகத்தில் தங்கியிருக்கும் நபர்களுக்கு ஓவர்ஸ்டே அபராதம் முதல் நாளுக்கு 200 திர்ஹம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் 100 திர்ஹம் அபராதம் மற்றும் சேவை கட்டணமாக 100 திர்ஹமும் வசூலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் கூறுகையில், “இருப்பினும், ஓவர்ஸ்டே அபராதங்களின் கணக்கீடு செப்டம்பர் 11 முதல் கணக்கில் கொள்ளப்படுமா அல்லது விசிட் விசா காலாவதியான தேதியிலிருந்து கணக்கில்கொள்ளப்படுமா என்று உறுதியாகக் கூறமுடியாது. விசா தகவல்களின் அடிப்படையில், தொகை எவ்வாறு கணக்கிடப்படும் என்பதை இம்மிகிரேஷன் அதிகாரிகள் மட்டுமே சொல்ல முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

 

ADVERTISEMENT