ADVERTISEMENT

துபாயில் அனுமதியின்றி பயணிகளை ஏற்றிச் சென்ற 220 தனியார் கார்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்!!

Published: 5 Jun 2024, 12:01 PM |
Updated: 5 Jun 2024, 12:01 PM |
Posted By: Menaka

அரசின் முறையான உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட 220 க்கும் மேற்பட்ட தனியார் கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

துபாய் விமான நிலையத்தின் (DXB) டெர்மினல்கள் 1, 2 மற்றும் 3ஐச் சுற்றி RTA மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு பொதுத் துறை நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து மொத்தம் 90 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஹத்தாவில் 86 கார்கள் மற்றும் ஜெபல் அலி பகுதியைச் சுற்றி 49 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து RTAவின் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகள் கண்காணிப்பு இயக்குநர் சயீத் அல் பலூஷி கூறுகையில், துபாய் காவல்துறை ஜெனரல் தலைமையகத்துடன் (Dubai Police General HQ) ஒருங்கிணைந்து, எமிரேட்டின் பல பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டதா கூறியுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அறியப்பட்ட இடங்களில் உரிமம் இல்லாத பயணிகள் போக்குவரத்தை ஆய்வு செய்ததாகவும், உரிமம் இல்லாத வாகனங்களில் பயணிகள் போக்குவரத்து மற்றும் இந்த சேவைகளை ஊக்குவிக்கும் குடியிருப்பாளர்களுக்கு அபராதம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

துபாயில் கார்கள் மூலம் பயணிகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் 2021 ஆம் ஆண்டின் எக்சிகியூட்டிவ் கவுன்சில் தீர்மானம் எண் (20) 2016 இன் நிறைவேற்று கவுன்சில் தீர்மானம் எண் (6) இன் படி, எமிரேட்டில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றால், தனிநபர்களுக்கு 30,000 திர்ஹம்ஸ் வரையும், நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்ஸ் வரையும் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel