ADVERTISEMENT

ஓமானில் இன்று மசூதிக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி.. பலர் காயம்..

Published: 16 Jul 2024, 11:13 AM |
Updated: 16 Jul 2024, 11:37 AM |
Posted By: admin

ஓமானில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் வளைகுடா நாடுகளில் அரிதானது என்பதால் தற்பொழுது நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதிகாரிகள் வெளியிட்ட முதற்கட்ட தகவல்களின்படி, ஓமானின் தலைநகரான மஸ்கட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த ராயல் ஓமான் காவல்துறை நிலைமையை விரைவாகக் கையாண்டதுடன் நிலைமையைக் கட்டுப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்தியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான ஒரு அறிக்கையில், ஓமான் காவல்துறை, “ஆரம்பகட்ட தகவல்களின்படி வாதி அல் கபீர் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்” என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், அதிகாலை நேரத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து ஃபஜ்ருக்கு (காலை தொழுகைக்கு) கூடியிருந்த ஏராளமான வழிபாட்டாளர்கள் அங்குமிங்கும் ஓடுவதையும், போலீஸ் சைரன்கள் முழங்க, சட்ட அமலாக்க வாகனங்கள் மசூதியைச் சுற்றி வளைப்பதையும் காணலாம்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சூழ்நிலைகளை வெளிக்கொணர, ஆதாரங்களை சேகரிக்கவும், முழுமையான விசாரணையை நடத்தவும் அதற்குண்டான செயல்பாடுகளை தொடங்கியுள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் இரங்கல் தெரிவித்ததோடு, இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel