ADVERTISEMENT

ஷார்ஜா: குடியிருப்பு, தொழில்துறை பகுதிகள் உட்பட 4100 இலவச பார்க்கிங் இடங்கள் கட்டண பார்கிங்காக மாற்றம்..!! முனிசிபாலிடி அறிவிப்பு..!!

Published: 20 Sep 2020, 1:32 PM |
Updated: 20 Sep 2020, 1:41 PM |
Posted By: admin

ஷார்ஜாவில் இருக்கக்கூடிய 4,100 இலவச பார்க்கிங் இடங்கள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் கட்டண பார்க்கிங்காக மாற்றப்பட்டுள்ளதாக ஷார்ஜா முனிசிபாலிடி அறிவித்துள்ளது. தற்பொழுது கட்டண பார்க்கிங்காக மாற்றப்பட்டுள்ள இடங்களில் ஷார்ஜாவின் 3, 10, 15 மற்றும் 17 வது தொழில்துறை பகுதிகள் உள்ளிட்டவையும் அடங்கும் என்றும் ஷார்ஜா நகராட்சி தனது சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், தொழில்துறை பகுதிகள் தவிர புதிய கட்டண பார்க்கிங் திட்டம் முவைலா வணிக பகுதி, அல் தாவூன் மற்றும் அல் நஹ்தா ஆகிய குடியிருப்பு பகுதிகளில் இருக்கக்கூடிய வாகன நிறுத்துமிடங்களையும் உள்ளடக்கியது என்றும் ஷார்ஜா நகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் மேலும் 230 கூடுதல் இலவச பார்க்கிங் இடங்களையும் கட்டண பார்க்கிங்காக மாற்றியிருப்பதுடன், பார்க்கிங் டிக்கெட்டை அச்சிடத் தேவையில்லாத தொடுதிரை (touchscreen) மூலமாக இயங்கும் ஸ்மார்ட் பார்க்கிங் மீட்டர்களையும் ஷார்ஜா நகராட்சி செயல்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

2020 ஆம் ஆண்டின் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து, பார்க்கிங் சந்தாக்களை வழங்கியது மற்றும் புதிப்பித்தது என மொத்தம் 6,323 சந்தாக்களை வழங்கியுள்ளது. அதனுடன் வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்களுக்கு 583 பார்க்கிங் முன்பதிவு அனுமதிகளையும் வழங்கியுள்ளதாக ஷார்ஜா முனிசிபாலிடி அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.