ADVERTISEMENT

UAE: வேலையில் சேர்ந்த முதல் நாளே டெர்மினேட் செய்யப்பட்ட ஊழியருக்கு 100,000 திர்ஹம்ஸ் இழப்பீடு..!! நடந்தது என்ன..??

Published: 6 Aug 2024, 1:19 PM |
Updated: 6 Aug 2024, 1:37 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியருக்கு 100,000 திர்ஹம்ஸ் வழங்குமாறு அபுதாபி நீதிமன்றம் ஒரு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி குடும்ப, சிவில் மற்றும் நிர்வாக உரிமைகோரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் படி, ஒரு நிறுவனத்தில் பெண் ஊழியருக்கு 31,000 திர்ஹம்ஸ் மாத சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கின்றது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிடப்பட்ட இந்த புதிய வேலையை ஏற்க அவர் தனது முந்தைய வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.

இருப்பினும், வேலை ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட கடமைகளை நிறைவேற்றாமல் அல்லது விளக்கம் இல்லாமல் புதிய நிறுவனம் அப்பெண் ஊழியரை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அதிரடியாக பணிநீக்கம் செய்திருக்கிறது. இதனால் தான் அதிர்ச்சி அடைந்ததாக நீதிமன்றத்தில் அப்பெண் கூறியிருக்கிறார். இந்த திடீர் பணிநீக்கம் தனக்கு குறிப்பிடத்தக்க நிதி, உணர்வு மற்றும் நற்பெயர் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அந்த பெண் ஊழியர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT

மேலும் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாக வாதிட்ட அவர், இந்த ஒப்பந்தமானது காப்பீடு, போனஸ், பயண டிக்கெட்டுகள், விடுமுறைகள் மற்றும் சேவையின் இறுதிக் கொடுப்பனவுகள் (end of service payment) போன்ற நன்மைகளை உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனையடுத்து நிறுவனத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்து தனது முந்தைய வேலையை ராஜினாமா செய்த பிறகு, நியாயமற்ற முறையில் வேலை வாய்ப்பை ரத்து செய்ததன் மூலம் நிறுவனம் தவறு செய்ததாக நீதிமன்றம் கண்டறிந்திருக்கிறது. அதனால் அந்த பெண் ஊழியருக்கு இழப்பீடு வழங்குவதுடன் அவரது சட்டக் கட்டணம் மற்றும் செலவுகளையும் ஈடுகட்ட வேண்டும் என்று நிறுவனத்திற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel