ADVERTISEMENT

இன்று முதல் நுழைவு அனுமதிகளை மீண்டும் வழங்கத் துவங்கிய அமீரகம்..!!

Published: 24 Sep 2020, 9:16 AM |
Updated: 24 Sep 2020, 9:27 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டு புதிய விசா நுழைவு அனுமதி வழங்குவதும் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 24) முதல் அமீரக அரசானது வேலை அனுமதி (work permit) தவிர்த்து மீண்டும் நுழைவு அனுமதி வழங்க ஆரம்பித்துள்ளது என்று அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (FAIC) இன்று (வியாழக்கிழமை) இது பற்றி அறிவிக்கையில், மீண்டும் விசாக்களை வழங்குவது ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகவும், நாட்டின் பொருளாதாரத்தின் மீட்பு திட்டங்களை ஆதரிப்பதற்கான நாட்டின் முயற்சிகளை வலுப்படுத்துவதாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், வேலைக்கான நுழைவு அனுமதிக்கு விதித்திருந்த தடை நீடிக்கும் என்றும் ICA தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT