ADVERTISEMENT

அமீரகத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு குட் நியூஸ்.. 10 GB இலவச டேட்டாவுடன் இலவச eSIM வழங்கப்படும் என தகவல்..!!

Published: 17 Sep 2024, 6:06 PM |
Updated: 17 Sep 2024, 6:07 PM |
Posted By: Menaka

சர்வதேச பார்வையாளர்களின் விருப்பமான சுற்றுலா இலக்காக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்போது சுற்றுலாப் பயணிகளுக்கு 10 GB இலவச டேட்டாவுடன் இலவச உடனடி eSIM ஐ வழங்கப்படும் என்று அமீரகத்தின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான e& (எடிசலாட்) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, அமீரகத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் நாட்டில் தரையிறங்கியவுடன் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமும், முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம் தடையின்றி இணைப்பதன் மூலமும் e& ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட eSIM ஐ சுயமாக ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமீரகத்திற்கு வரும் சுற்றுலாவாசிகள் இமிக்ரேஷனைக் கடந்து சென்றதும் தங்கள் ‘Free Visitor Line eSIM’ ஐ செயல்படுத்தலாம் என்று கூறியுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் இலவச eSIM ஆனது 10GB இலவச டேட்டாவுடன் வருகிறது மற்றும் ஒரு நாளைக்கு செல்லுபடியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சலுகை பார்வையாளர்கள் அன்புக்குரியவர்களுடன் இணைவதையும் அத்தியாவசிய சேவைகளை உடனடியாக அணுகுவதையும் உறுதி செய்கிறது.

இது வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியத்தை நீக்குவதுடன் நாட்டிற்கு வருகை தரும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளுக்கு பயனளிக்கிறது. கடந்த ஆண்டு, துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DET) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, துபாய் மட்டும் 17.15 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச பார்வையாளர்களை வரவேற்றுள்ளது. மேலும், அபுதாபிக்கு 3.8 மில்லியன் சர்வதேச பார்வையாளர்கள் ஒரே இரவில்  வந்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து e& இன் தலைமை நுகர்வோர் அதிகாரி கலீத் எல்கௌலி பேசிய போது, “எங்கள் இலவச விசிட்டர் லைன் eSIM களுக்கான சுய-செயல்படுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்துவது டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான வசதியை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதுடன் புதுமைக்கான எங்கள் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான முதன்மையான இடமாக அமீரகம் தொடர்ந்து இருப்பதால், இந்த முயற்சி மொபைல் இணைப்புக்கான புதிய தரநிலையை அமைக்கும் என நாங்கள் நம்புகிறோம். எங்கள் மதிப்புமிக்க பார்வையாளர்களுக்கு இதுபோன்ற மேம்பட்ட தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் வழிவகுப்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel