வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்படும் சிறப்பு விமான சேவைகளானது அக்டோபர் மாதமும் தொடரும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அடுத்த மாதத்தில் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களில் 44 விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்
அமீரகத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்

