ADVERTISEMENT

COVID-19 PCR சோதனைக்கான கட்டணத்தை Dh180 ஆக குறைத்த ஹெல்த்கேர் நிறுவனம்..!! 24 முதல் 48 மணி நேரத்திற்குள் முடிவுகள் வெளியீடு..!!

Published: 26 Sep 2020, 9:37 AM |
Updated: 26 Sep 2020, 9:37 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கண்டறிய மேற்கொள்ளப்படும் COVID-19 PCR சோதனைகளுக்கான கட்டணம் தற்பொழுது 180 திர்ஹம்ஸாக குறைக்கப்பட்டுள்ளதாக அபுதாபியில் இயங்கி வரும் VPS ஹெல்த்கேர் நிறுவனம் (VPS Healthcare) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து VPS ஹெல்த்கேர் நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ அறிகுறி இல்லாத நபர்களுக்கு தொற்றில்லாதவர் என்பதை உறுதிசெய்ய மேற்கொள்ளப்படும் COVID-19 PCR சோதனைகளுக்கான கட்டணத்தை குறைக்குமாறு சுகாதார அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலை தொடர்ந்து இந்த புதிய கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து VPS ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்களில் PCR சோதனைகள் கட்டணம் தற்போது Dh180 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் VPS ஹெல்த்கேர் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VPS ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவ மையங்களில் COVID-19 PCR சோதனையின் கட்டணத்தை குறைப்பது இது மூன்றாவது முறையாகும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள புர்ஜீல் (Burjeel), LLH, லைஃப்கேர் (Lifecare) மற்றும் மீடியோர் (Medeor) ஆகிய மருத்துவமனைகளிலும், அல் அய்னில் உள்ள புர்ஜீல் ராயல் (Burjeel Royal) மற்றும் மீடியோர் இன்டர்நேஷனல் (Medeor International) ஆகிய மருத்துவமனைகளிலும் இந்த புதிய கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, அபுதாபியின் அல் ரீம் ஐலேண்டில் (Al Reem Island) உள்ள புர்ஜீல் தின அறுவை சிகிச்சை மையத்திலும் (Burjeel Day Surgery Centre) COVID-19 PCR சோதனைக்கான கட்டணத்தை ஒரு நபருக்கு Dh200 லிருந்து Dh180 ஆக குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் VPS ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவ மையங்களில் மேற்கொள்ளப்படும் சோதனையின் முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கிடைக்கும் என்றும் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.