ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (திங்கள்கிழமை, செப்டம்பர் 28, 2020) புதிதாக 626 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 92,095 ஆக உயர்ந்துள்ளது.
அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 413 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 918 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 81,462 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.