ADVERTISEMENT

VBM-7: கத்தார், தமிழகம் இடையே இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்..!!

Published: 28 Sep 2020, 1:27 PM |
Updated: 28 Sep 2020, 1:28 PM |
Posted By: admin

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்படும் சிறப்பு விமான சேவைகளானது அக்டோபர் மாதமும் தொடரும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் 7 ம் கட்டத்தின் கீழ் அடுத்த மாதத்தில் கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களில் 4 விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் இருந்து இயக்கப்படும் இந்த நான்கு விமானங்களுமே தமிழகத்தின் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை அடைந்து பின்னர் சென்னை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கத்தார் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏர் பபுள் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதால் அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு விமான சேவைகள் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்தும் கத்தாருக்கு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, அடுத்த மாதம் இயக்கப்படும் விமானங்களில் 4 விமானங்கள் தமிழகத்தில் இருந்து கத்தாருக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு விமானங்களுமே சென்னை சர்வதேச நிலையத்தில் இருந்தே இயக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கத்தாரில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்

தமிழகத்தில் இருந்து கத்தாருக்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்

ADVERTISEMENT