தேசிய வானிலை துறையின் இன்றைய கணிப்புக்கு ஏற்ப புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின், ராஸ் அல் கைமாவில் உள்ள கத்ரா, அல் மனாய், ஷாவ்கா பகுதிகளில் கடும் மழை பெய்ததாகவும் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
الإمارات : الان تساقط البرد على كدرا في المنطقة الشرقية #مركز_العاصفة
٣٠_٩_٢٠٢٠ pic.twitter.com/kl0KBZLdIc— مركز العاصفة (@Storm_centre) September 30, 2020
முன்னதாக, தேசிய வானிலை மையம் இன்று ஓரளவு மேகமூட்டமான வானிலைக்கு வாய்ப்புள்ளதாக கணித்திருந்தது. குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு நோக்கிய பகுதிகளில் வெப்பச்சலன மேகம் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
الإمارات : الان تساقط البرد على كدرا في المنطقة الشرقية #مركز_العاصفة
٣٠_٩_٢٠٢٠ pic.twitter.com/JUVG9gGHJC— مركز العاصفة (@Storm_centre) September 30, 2020
பகலில் அதிகபட்ச வெப்பநிலை உள் பகுதிகளில் 41- 45 ° C ஆகவும், கடற்கரையில் 40-36 ° C ஆகவும், மலைகளில் 31-35 ° C ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தேசிய வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும், தென்கிழக்கு திசையில் இருந்து வடகிழக்கு வரை காற்று மிதமாக இருக்கும் என்றும், சில பகுதிகளில் தூசி வீசும், 20 முதல் 30 கி.மீ வேகத்தில் புழுதி காற்று வீசும் என்றும், சில நேரங்களில் 45 கி.மீ வேகம் வரை புழுதி காற்று வீசலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
الإمارات : الان هطول أمطار الخير على كدرا في المنطقة الشرقية #مركز_العاصفة
٣٠_٩_٢٠٢٠ pic.twitter.com/TNcQoS93cD— مركز العاصفة (@Storm_centre) September 30, 2020