ADVERTISEMENT

சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை மீண்டும் நீட்டித்தது இந்தியா..!! அக்டோபர் 31 வரை தடை நீடிக்கும் என அறிவிப்பு..!!

Published: 1 Oct 2020, 11:48 AM |
Updated: 1 Oct 2020, 11:49 AM |
Posted By: admin

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பையொட்டி விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானப்போக்குவரத்து தடையானது அக்டோபர் மாதமும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் முதன் முதலில் இந்திய அரசானது சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்தது.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து, கடந்த மே மாதத்தில் இருந்து வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு வந்தே பாரத் எனும் திட்டம் தொடங்கப்பட்டது. பல கட்டங்களாக திருப்பி அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வரும் இத்திட்டத்தில் தற்பொழுது ஆறாவது கட்டம் முடிந்து ஏழாவது கட்டமும் ஆரம்பித்துவிட்டது.

மேலும், சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை இந்திய அரசு ஒவ்வொரு மாதமாக நீட்டிக்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்திய அரசானது குறிப்பிட்ட நாடுகளுடன் “ஏர் பபுள்” ஒப்பந்தத்தின் கீழ் சிறப்பு விமான சேவைகளையும் இயக்கி வருகிறது. சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு அக்டோபர் 31 வரை தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இந்த சிறப்பு விமான சேவைகளுக்கும், சரக்கு விமானப் போக்குவரத்திற்கும் எவ்வித தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT