ADVERTISEMENT

அமீரகத்தில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்.!! பைலட் உயிரிழப்பு.. டிரைனிங் சென்ற மாணவரை தேடும் பணி தீவிரம்..!!

Published: 12 Nov 2024, 5:41 PM |
Updated: 12 Nov 2024, 5:49 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்ததாக அமீரகத்தின் சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர் விமானப் பயிற்றுவிப்பாளர் (trainer) என்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

முதற்கட்ட விசாரணையில் அவர் ஒரு பயிற்சி விமானத்தில் விமானம் ஓட்டுதல் பயிற்சியில் ஈடுபட்டு வந்த ஒரு மாணவருடன் வானில் பறந்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த விமானியின் உடல் ஃபுஜைரா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்துக்குள்ளான விமானத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவர் மற்றும் விமானத்தின் பாகங்களை மீட்புக் குழுவினர்கள் தொடர்ந்து தேடி வருவதாக சிவில் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் பயிற்சி பெற்றவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களில் ரேடார் தொடர்பை இழந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துயர சம்பவத்தையடுத்து ஆணையம் உயிரிழந்த பைலட்டின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து வருவதாகவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel