ADVERTISEMENT

ஓமானில் மூன்று நாட்களில் 2,685 பேருக்கு கொரோனா பாதிப்பு..!! 42 பேர் உயிரிழப்பு..!

Published: 4 Oct 2020, 10:12 AM |
Updated: 4 Oct 2020, 10:12 AM |
Posted By: admin

ஓமானில் கடந்த மூன்று நாட்களில் புதிதாக 2,685 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் ஓமானில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 101,270 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், புதிதாக 42 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் இதனால் ஓமானில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 977 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 90,296 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT