ஐக்கிய அரபு அமீரகதில் கொரோனா பாதிப்பையொட்டி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த வேலைவாய்ப்புக்கான நுழைவு விசாக்களில் குறிப்பிட்ட துறைகளை சார்ந்தவர்களுக்கு மட்டும் தற்பொழுது மீண்டும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரக அரசாங்கமானது, அரசு நிறுவனங்கள் (government), பகுதியளவு அரசு சார்ந்த நிறுவனங்கள் (semi government) மற்றும் முக்கிய துறை சார்ந்த நிறுவனங்களில் (vital sector) வேலைவாய்ப்புக்கான நுழைவு மற்றும் பணி அனுமதி வழங்கல் (entry and work permits) மற்றும் வீட்டுத் தொழிலாளர்களுக்கான விசாக்கள் ஆகியவற்றை மீண்டும் வழங்கும் என்று அதிகாரிகள் இன்று (திங்கள்கிழமை) அறிவித்துள்ளனர்.
மேற்குறிப்பிட்ட விசாக்களில் அமீரகம் நுழையும் நபர்களுக்கு, கொரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளான, தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு PCR சோதனைகள் மேற்கொள்ளுதல், தேவைப்பட்டால் தனிமைப்படுத்தல் முறை போன்றவை நடைமுறையில் இருக்கும் என்று அமீரக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே போன்று, செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸ் விசாக்களை வைத்திருக்கும் நபர்கள் துபாய் குடியிருப்பாளர்களாக இருந்தால் GDRFA ஒப்புதலும் மற்ற அமீரக குடியிருப்பாளர்கள் ica.gov.ae என்ற இணையதளத்தில் தங்களின் பயண ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டும் அமீரகம் திரும்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
The Federal Authority for Identity and Citizenship in coordination with the NCEMA resumes the granting of entry permits for domestic workers as well as employment permits for government and semi-governmental entities and vital facilities in the country#CommitToWin pic.twitter.com/lAU1cfnWjp
— NCEMA UAE (@NCEMAUAE) October 5, 2020