ADVERTISEMENT

துபாய்: ஹத்தாவில் தொடங்கிய ‘வின்டர் ஃபெஸ்டிவல்’..!! ஜனவரி 12 வரை அனுமதி இலவசம்.. முழு விபரங்கள் இங்கே!!

Published: 15 Dec 2024, 4:29 PM |
Updated: 15 Dec 2024, 4:36 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்பொழுது குளிர்காலம் நிலவி வரும் பட்சத்தில் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் அமீரகத்தில் வசிப்பவர்களும் சுற்றுலாப் பயணிகளும் துபாயில் உள்ள 3,000 ஆண்டுகள் பழமையான மலை கிராமமான ஹத்தாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஹத்தா வின்டர் ஃபெஸ்டிவல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் இரண்டாவது சீசனை கொண்டாடும் ஹத்தா வின்டர் ஃபெஸ்டிவலானது 40 நாட்கள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த டிசம்பர் 11 அன்று குளிர்காலத்தில் தொடங்கப்பட்ட துபாய் பிரச்சாரத்தின் ஒரு பகுதியான இந்த ‘ஹத்தா வின்டர் ஃபெஸ்டிவல்’ முயற்சியானது பல்வேறு இடங்களில் நடைபெறும் ஐந்து முக்கிய திருவிழாக்களைக் கொண்டுள்ளது. இந்த ஃபெஸ்டிவலானது டிசம்பர் 13, 2024 முதல் ஜனவரி 12, 2025 வரை நடைபெறுகிறது.

எங்கே அமைந்துள்ளது?

ஹத்தாவில் உள்ள லீம் ஏரியின் (leem lake) அழகிய சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் மற்றும் பிராண்ட் துபாய் ஏற்பாடு செய்த இந்த ஃபெஸ்டிவலில் 120 ஒர்க் ஷாப்கள், 14 க்கும் மேற்பட்ட செயல்பாடுகள், நான்கு சமூக நிகழ்வுகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளைக் காண்பிக்கும் முக்கிய மேடை ஆகியவை அடங்கும்.

ADVERTISEMENT

என்ன எதிர்பார்க்கலாம்?

லீம் ஏரியில் நடக்கும் முக்கிய ஹத்தா ஃபெஸ்டிவலுடன் கூடுதலாக, திருவிழா வரிசையில் விவசாய திருவிழா (agricultural festival), தேன் திருவிழா (honey festival), கலாச்சார இரவுகள் (cultural nights) மற்றும் ‘ஹத்தா x துபாய் ஷாப்பிங் திருவிழா’ (DSF) ஆகியவை அடங்கும்.

தேன் திருவிழா (டிசம்பர் 27 முதல் 31 வரை):

துபாய் முனிசிபாலிட்டி ஹத்தா தேன் திருவிழாவின் ஒன்பதாவது பதிப்பை நடத்துகிறது. இது பார்வையாளர்களுக்கு உள்ளூர் தேன் வகைகளை ஆராய்வதற்கும் எமிராட்டி தேனீ வளர்ப்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது.

ADVERTISEMENT

விவசாய விழா (ஜனவரி 18 முதல் 22 வரை):

இந்த நிகழ்வு எமிராட்டி பண்ணைகளில் இருந்து புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்துகிறது, இது பிராந்தியத்தின் விவசாய பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது.

கலாச்சார இரவுகள்:

ஹத்தா கலாச்சார இரவுகள் அப்பகுதியின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகைக் கொண்டாடும். மவுண்டைன் பைக்கிங், ஹைகிங், சைக்கிள் ஓட்டுதல், ஸ்டாண்ட்-அப் பேடில்போர்டிங் (stand-up paddleboarding), கயாக்கிங், நீண்ட தூர பந்தயங்கள் மற்றும் மோட்டார்ஸ்போர்ட் நிகழ்வுகள் போன்ற விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுடன் உள்ளூர் கலைஞர்களின் கலை நிறுவல்களையும் எதிர்பார்க்கலாம்.

ஹத்தா x துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் (DSF):

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த முன்முயற்சியில் ஒளி காட்சிகள், நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கான செயல்பாடுகள் உள்ளன. ஜனவரி 5-ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாணவேடிக்கைகள் நடைபெறும்.

ஹத்தாவிற்கு எப்படி செல்வது?

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) இயக்கப்படும் துபாயிலிருந்து ‘ஹத்தா எக்ஸ்பிரஸ் பஸ்’ (H02) இல் நீங்கள் செல்லலாம். இதற்கு 25 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பாதை துபாய் மாலில் இருந்து ஹத்தா பிரதான பேருந்து நிலையத்திற்கு சுமார் 1 மணி நேரம் 55 நிமிடங்களில் செல்கிறது. பேருந்துகள் தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கும், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை புறப்படும்.

முக்கிய இடங்களைப் பார்வையிட, ஹத்தா டேம் மற்றும் லீம் லேக் போன்ற பிரபலமான இடங்களில் நிற்கும் ‘ஹத்தா ஆன் அண்ட் ஆஃப்’ பஸ்ஸைப் பயன்படுத்தவும். ஒரு நிறுத்தத்திற்கு 2 திர்ஹம் கட்டணம், உங்கள் நோல் கார்டு மூலம் செலுத்த வேண்டும். பேருந்து தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் புறப்படும். நீங்கள் ஹத்தாவிற்கு வாகனத்தில் செல்ல திட்டமிட்டால், துபாய்-ஹத்தா சாலையில் (E44) நீங்கள் செல்லலாம், இதில் துபாயிலிருந்து ஹத்தா செல்வதற்கு ஏறக்குறைய இரண்டு மணிநேரம் ஆகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel