ADVERTISEMENT

UAE லாட்டரியின் முதல் டிரா முடிவுகள் வெளியீடு..!! வெற்றியாளர்களை வெளியிட்ட நிர்வாகம்..!!

Published: 15 Dec 2024, 1:11 PM |
Updated: 15 Dec 2024, 1:11 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரே உரிமம் பெற்ற லாட்டரியும், தி கேம் LLC நிறுவனத்தால் நடத்தப்படும் UAE லாட்டரியின் முதல் டிராவானது, நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு அபுதாபியில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அமீரகத்தில் பல மாதங்களுக்கு பிறகு எண்களை பொருந்தக்கூடிய டிரா நடத்தப்பட்டதால் பங்கேற்பாளர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இதன் முதல் டிராவில் பங்குபெற்று வெற்றி பெற்ற போட்டியாளர்களின் விபரங்கள் நேற்று மாலை அறிவிக்கப்ட்டுள்ளது. அபுதாபியிலிருந்து நேரலையில் ஒளிபரப்பப்பட்ட இந்த டிராவை டயல மக்கி மற்றும் சாடி கலாஃப் ஆகிய இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கினர். அப்போது பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெற்றி எண்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டன.

அதில், முதலாவதாக 100 மில்லியன் திர்ஹம்ஸிற்கான பரிசுத்தொகையை வழங்கும் வெற்றி எண்கள் அறிவிக்கப்பட்டது, நாட்கள் தொகுப்பில் வெற்றி எண்கள் 26, 19, 9, 11, 18 மற்றும் 17 எனவும், மாதங்களின் தொகுப்பில் வெற்றி எண் 7 எனவும் நேரலையில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த அனைத்து எண்களையும் பொருந்திய வெற்றியாளர் யார் என்பது பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

ADVERTISEMENT

எனினும், இந்த டிராவில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட 100,000 திர்ஹம்ஸ் பணத்தை பெறும் லக்கி சான்ஸ் வெற்றியாளர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டது. அதன்படி, CP 6638485, CQ 6766870, DU 9775445, DJ 8619319, DC 7978145, CO 6505342 மற்றும் CS 6983220 என்ற ஐடிகளை கொண்ட நபர்களுக்கு 100,000 திர்ஹம்ஸ் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

ADVERTISEMENT

UAE லாட்டரியில் எவ்வாறு செயல்படுகிறது?

அமீரகத்தின் பொது வர்த்தக கேமிங் ஒழுங்குமுறை ஆணையத்தால் (GCGRA) ஒழுங்குபடுத்தப்பட்ட UAE லாட்டரியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதன் இணையதளம் வழியாக பங்கேற்கலாம். இந்த டிராவில் லக்கி டே கிராண்ட் பரிசு 100 மில்லியன் திர்ஹம்ஸ், தலா 100,000 திர்ஹம்ஸ் வெல்வதற்கு உறுதியளிக்கப்பட்ட ஏழு லக்கி சான்ஸ் ஐடிகள் மற்றும் 50,000 திர்ஹம்ஸ் வரை வெல்வதற்கான ஸ்கிராட்ச் கார்டுகளை வாங்குவதற்கான விருப்பமும் இந்த டிராவில் உள்ளது.

பங்கேற்பாளர்கள் இரண்டு தனித்தனி பிரிவுகளிலிருந்து ஏழு எண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, நாட்கள் தொகுப்பிலிருந்து (Days section) 1 முதல் 31 வரையிலான நாட்களில் ஆறு எண்களையும், மாதங்களின் தொகுப்பிலிருந்து (months section) 1 முதல் 12 வரையிலான மாதங்களிலிருந்து ஒரு எண்ணையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த டிராவில் வாங்கப்படும் ஒவ்வொரு லக்கி டே டிக்கெட்டும் 100 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசுக்கான டிராவில் நபரை பங்கேற்க செய்வது மட்டுமல்லாமல், லக்கி சான்ஸ் டிராக்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. இதன் அடுத்த வரும் டிரா டிசம்பர் 28 ம் தேதி அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel