ADVERTISEMENT

அக்டோபர் 16 முதல் அமீரகத்தில் தொடங்கவிருக்கும் மழைக்காலம்..!! வானியல் மற்றும் விண்வெளி மையம் தகவல்..!!

Published: 11 Oct 2020, 5:11 PM |
Updated: 11 Oct 2020, 5:11 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்து இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வரும் வேளையில், வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் அமீரகத்தில் மழைக்காலம் தொடங்க இருப்பதாக வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான அரபு ஒன்றியத்தின் உறுப்பினர் இப்ராஹிம் அல் ஜார்வான் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் அவர் கூறுகையில், மழைக்கால சீசன் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதியுடன் முடிவடையும் எனவும் அதன் பிறகு அமீரகத்தில் குளிர்காலம் விரைவில் வரும் என்றும் அல் ஜார்வான் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 16 முதல் தொடங்கும் மழைக்கால பருவத்தில் அமீரகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35°C ஆகவும், குறைவான வெப்பநிலை 10°C வரை செல்லும் என எதிர்பாக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களில் அமீரகத்தில் அஜ்மான், ஷார்ஜா மற்றும் அல் அய்ன் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை மற்றும் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT