ADVERTISEMENT

குளோபல் வில்லேஜ் செல்லும் நபர்களுக்காக இயக்கப்படவிருக்கும் பேருந்து சேவைகள்..!!

Published: 17 Oct 2020, 2:26 PM |
Updated: 17 Oct 2020, 2:31 PM |
Posted By: admin

துபாயின் முன்னணி பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார இடங்களுள் ஒன்றான குளோபல் வில்லேஜ் (Global Village) வரும் 25 ம் தேதி முதல் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, துபாயில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் குளோபல் வில்லேஜ் செல்லும் மக்களுக்காக பொது பேருந்து சேவையானது மீண்டும் தொடங்கபடும் என்று ​​துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

RTA வெளியிட்ட அறிவிப்பில், 2020-2021 ஆம் ஆண்டிற்கான குளோபல் வில்லேஜ் தொடங்கப்படுவதையொட்டி, குளோபல் வில்லேஜ் செல்வதற்கான நான்கு பேருந்து வழித்தடங்களின் செயல்பாட்டை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே போன்று அக்டோபர் 25 ஆம் தேதி முதல் எலக்ட்ரிக் ஆப்ரா (பாரம்பரிய படகு) சுற்றுலா சேவைகளை குளோபல் வில்லேஜினுள் ஆர்டிஏ மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு வழித்தடங்களாவன:

  • ரஷீதியா மெட்ரோ நிலையத்திலிருந்து (Rashidiya Metro Station) ரூட் 102
  • யூனியன் மெட்ரோ நிலையத்திலிருந்து (Union Metro Station) ரூட் 103
  • அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து (Al Ghubaiba Bus Station) ரூட் 104
  • மால் ஆஃப் எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்திலிருந்து (Mall of Emirates Metro Station) ரூட் 106

பொது போக்குவரத்து சேவையில் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும் என்றும், குளோபல் வில்லேஜ் செல்லும் பயணிகளுக்கு டீலக்ஸ் வோல்வோ ரக பேருந்துகள் பயன்படுத்தப்படும் என்றும் பொது போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் ஹாஷிம் பஹ்ரோஜியன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உயர்ரக பேருந்து சேவைகளானது பயணிகளுக்கு உயர் பாதுகாப்பையும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய பயணமாகவும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT