ADVERTISEMENT

விரைவில் துவங்கும் ரமலான்: அமீரகத்தில் ஷஃபான் மாதம் ஜனவரி 31 ஆரம்பமாகும் என கணிப்பு..!!

Published: 29 Jan 2025, 6:08 PM |
Updated: 29 Jan 2025, 6:08 PM |
Posted By: Menaka

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் துவங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் வானியல் கணக்கீடுகளின்படி, இஸ்லாமிய நாட்காட்டியின் எட்டாவது மாதமான ஷஃபான் வருகின்ற ஜனவரி 31, வெள்ளிக்கிழமை தொடங்கும் என்று அமீரக வானியல் மையம் சமூக ஊடக தளத்தில் அறிவித்துள்ளது. ஷஃபான் என்பது ரமலான் மாதத்திற்கு முந்தைய மாதமாகும். எனவே உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் ரமலான் நோன்பின் முதல் நாள் எப்போது என்பதை தீர்மானிக்க ஷஃபான் தொடக்கத்தைக் கணக்கிடுவார்கள்.

ADVERTISEMENT

அதேபோல், ரமலான் மாதம் எப்போது தொடங்குகிறது என்பதைக் கண்டறிய, ஷாபனின் 29 வது நாளில் அமீரகம் உள்ளிட்ட பிற இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் வானில்  பிறை தென்படுகிறதா என ஆராயும். அந்த வகையில், ரமலான் பிறை வானில் தெரிந்தால் மட்டுமே ரமலான் மாதத்தின் தொடக்கம் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு நோன்பு தொடங்கும் சரியான தேதி பிறை பார்ப்பதைப் பொறுத்தது என்றாலும், இது மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து வானியல் மையத்தின் இயக்குனர் முகமது ஷவ்காட் ஓடே அவர்கள் தெரிவிக்கையில், ஜனவரி 30, வியாழக்கிழமையன்று, அனைத்து முஸ்லீம் நாடுகளிலும், தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பிறை கண்ணுக்குத் தெரியும் என்று மையம் தெரிவித்துள்ளது. இதன் பொருள் ஜனவரி 31, ஷஃபான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை ரமலான் மாதம் முழுவதும் பள்ளி, அலுவலகங்கள் செயல்படும் நேரங்களில் மாற்றம் இருக்கும். குறிப்பாக அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரம் தினசரி இரண்டு மணி நேரங்கள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT