ADVERTISEMENT

மீலாது நபியை முன்னிட்டு அரசுத்துறை ஊழியர்களுக்கு அமீரகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு..!!

Published: 21 Oct 2020, 8:30 AM |
Updated: 21 Oct 2020, 8:32 AM |
Posted By: admin

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளான மீலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபர் 29-ம் தேதி வியாழக்கிழமை அமீரகத்தின் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுவதாக அமீரகத்தின் அரசு மனித வளங்களுக்கான மத்திய ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், இதன் மூலம், பொதுத்துறை ஊழியர்களுக்கு இம்மாத இறுதியில் வியாழன், வெள்ளி, சனி என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. நவம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை முதல் ஊழியர்கள் மீண்டும் தங்களின் பணிக்குத் திரும்பலாம் என்றும் மத்திய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

ADVERTISEMENT