ADVERTISEMENT

புதிதாக வழங்கப்பட்ட விசாக்களில் ஓமான் பயணிக்க அனுமதியில்லை..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

Published: 1 Nov 2020, 4:42 PM |
Updated: 1 Nov 2020, 4:42 PM |
Posted By: admin

இந்தியாவில் இருந்து செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா அல்லது எம்ப்ளாய்மென்ட் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே ஓமானிற்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமானது வெளியிட்டுள்ளது. மேலும் காலாவதியான விசாவினை புதுப்பித்தவர்களும் ஓமானிற்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதே நேரத்தில் புதிதாக வழங்கப்பட்ட விசாவினை வைத்திருப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஓமானில் கடந்த அக்டோபர் 1 ம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவிற்கும் ஓமானிற்கும் இடையே ஏர் பபுள் ஒப்பந்தம் போடப்பட்டு சிறப்பு விமான சேவைகள் இரு நாடுகளுக்கும் இடையே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏர் பபுள் ஒப்பந்தமானது இம்மாதம் இறுதி வரையிலும் (நவம்பர் 30) செல்லுபடியாகும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் இருந்து ஓமானுக்கு செல்லும் விமானங்களில் பயணிக்கும் நபர்கள் ஓமானின் சட்ட விதிகளின் படி அவர்கள் சேர வேண்டிய இடம் ஓமான் என்றால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று ஓமான் அரசு சார்பாக கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமானது வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஓமானிற்கும் இந்தியாவிற்கும் இடையே விமானங்களை இயக்கி வருகின்றது.

ADVERTISEMENT