துபாயில் ஒரு நிறுவனத்தைத் தொடங்க அல்லது வணிகத்தை நடத்த நீங்கள் திட்டமிட்டால், துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா (DET) துறையிடமிருந்து வர்த்தக உரிமத்தைப் (Trade License) பெறுவது அவசியம். இது துபாய் எமிரேட்டில் வணிக நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக நடத்துவதற்கு அனுமதிக்கிறது.
வணிக உரிமையாளர்கள் ‘Invest in Dubai’ என்ற போர்டல் மூலம் தங்கள் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது அருகிலுள்ள சேவை மையங்களைப் பார்வையிடலாம். இந்த செயல்முறையைத் தொடங்க, விண்ணப்பதாரர்கள் முதலில் ஆரம்ப ஒப்புதல் பெற வேண்டும், Trade Name எனும் வர்த்தக பெயரை முன்பதிவு செய்ய வேண்டும், இறுதியாக, வர்த்தக உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
படி 1: ஆரம்ப ஒப்புதலுக்கான கோரிக்கை
வர்த்தக உரிமத்தைப் பெறுவதற்கான முதல் படி ஆரம்ப ஒப்புதல் ஆகும். இந்த ஒப்புதலை வர்த்தகப் பெயரை முன்பதிவு செய்வதற்கு முன் அல்லது பின் பெறலாம். இது பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் உரிம கூட்டாளர்களை வரையறுக்க உதவுகிறது.
ஆரம்ப ஒப்புதலுக்குத் தேவையான ஆவணங்கள்:
- பாஸ்போர்ட் அல்லது எமிரேட்ஸ் ஐடியின் நகல்
- ஒருங்கிணைந்த எண் (UID)
- ரெசிடென்ஸ் பெர்மிட் அல்லது விசாவின் நகல் (GCC அல்லாத நாட்டினருக்கு)
- விண்ணப்பதாரர் ஒரு பிரதான நிலப்பகுதி (mainland company) நிறுவனத்திற்கு செயல்பாடுகளை மேற்கொள்ளவிருந்தால் ஸ்பான்சரிடமிருந்து NOC சான்றுதழ்
- நிறுவனத்தின் சங்கக் கட்டுரைகள் (Company’s articles of association) (தேவைப்பட்டால்)
- திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வு (Feasibility study of the project) (தேவைப்பட்டால்)
வணிகத்திற்கு தாய் நிறுவனம் இருந்தால், கூடுதல் ஆவணங்கள் தேவை, அவை:
- துபாயில் ஒரு கிளையைத் திறக்க தாய் நிறுவனத்தின் வாரியத் தீர்மானம் (board resolution)
- நிர்வாக இயக்குநருக்கான அங்கீகாரக் கடிதம் (authorisation of the managing director)
- தாய் நிறுவனத்தின் வணிகப் பதிவுச் சான்றிதழ்
- தாய் நிறுவனத்தின் குறிப்பாணையின் நகல் (parent company’s memorandum of association (MOA)
- தாய் நிறுவனத்தின் வர்த்தக உரிம நகல்
ஆரம்ப ஒப்புதலுக்கான கட்டணம் 120 திர்ஹம்ஸ்.
படி 2: வர்த்தகப் பெயரை முன்பதிவு செய்யுங்கள்
ஒரு வர்த்தகப் பெயரை (trade name) முன்பதிவு செய்வது மிக முக்கியமானது, ஏனெனில் அது அனைத்து சட்ட மற்றும் ஒப்பந்த விஷயங்களிலும் வணிகத்தை அதிகாரப்பூர்வமாக அடையாளம் காட்ட பயன்படுத்தப்படுகிறது.
Trade name-ஐ முன்பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடியைக் காட்ட வேண்டும். வர்த்தகப் பெயரை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் 620 திர்ஹம்ஸ் ஆகும். Trade name ஆங்கிலத்தில் இருந்தால், 2,000 திர்ஹம்ஸ் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Trade name தேர்வு செய்யும் முறை
- மூன்று எழுத்துக்களுக்கு மேல் இருக்க வேண்டும்
- ஆபாசமான, அநாகரீகமான வார்த்தைகள் இருக்கக் கூடாது.
- ‘கடவுள்’ போன்ற மதச் சொற்களை சேர்க்கக்கூடாது
- வணிகச் செயல்பாட்டை தர்க்கரீதியாக பிரதிபலிக்க வேண்டும்
- பெயர்கள் மொழிபெயர்ப்பு இல்லாமல் மொழியில் எழுதப்பட வேண்டும்
- ஏற்கனவே உள்ள வணிக பெயர்களைப் போன்ற பெயர்களை DET ரத்து செய்யலாம்
- அரசியல் அல்லது மதக் குறிப்புகள் உட்பட தடைசெய்யப்பட்ட பெயர்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
படி 3: வர்த்தக உரிமத்தை வழங்குதல்
துபாயில் மூன்று வகையான வர்த்தக உரிமங்கள் உள்ளன: சாதாரண உரிமம், உடனடி உரிமம் மற்றும் eTrader உரிமம்.
- சாதாரண உரிமம்: இதனை பெறுவதற்கு Memorandum of Association (MoA) மற்றும் தள குத்தகை ஒப்பந்தம் (site lease contract) தேவை.
- உடனடி உரிமம்: வெளிப்புற ஒப்புதல்கள் தேவையில்லாத செயல்பாடுகளுக்கு உடனடி உரிமம் வழங்கப்படுகிறது. இதை ஐந்து நிமிடங்களுக்குள் பெறலாம் மற்றும் முதல் வருடத்திற்கு ஒரு இருப்பிடம் இல்லாமல் வணிகங்கள் செயல்பட அனுமதிக்கிறது. இந்த உரிமத்தில் வணிக நடவடிக்கைகளுக்கான துபாய் சேம்பர் உறுப்பினர் மற்றும் GDRFA மற்றும் மனிதவளம் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின் நிறுவன அட்டைகள் ஆகியவை பெறலாம். இது மூன்று பேர் வரை பணியமர்த்த அனுமதி உள்ளது. இந்த உரிமத்திற்கு தகுதியான சட்டப் படிவங்களில் LLC, LLC-SO (ஒற்றை உரிமையாளர்), ஒரே நிறுவனம் மற்றும் சிவில் நிறுவனம் ஆகியவை அடங்கும்.
- eTrader உரிமம் வீட்டு அடிப்படையிலான வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பொதுவாக UAE மற்றும் GCC நாட்டினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த உரிமத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு சில தொழில்முறை சேவைகள் கிடைக்கக்கூடும், ஆனால் இது உணவு அல்லது சமையல் சார்ந்த வணிகங்களை உள்ளடக்காது, அவை UAE மற்றும் GCC நாட்டினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக DET கால் சென்டர் முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உரிம வகையின் அடிப்படையில் தேவையான ஆவணங்கள்:
- சாதாரண உரிமம்: அரசு நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல்கள் மற்றும் தேவைப்பட்டால் MoA மற்றும் site lease contract தேவை
- உடனடி உரிமம்: ஒருங்கிணைந்த எண் அல்லது ஐடி எண்
- eTrader உரிமம்: எமிரேட்ஸ் ஐடி எண்
வர்த்தக உரிமத்திற்கான கட்டணம்:
- eTrader உரிமம்: தோராயமாக. 1,370 திர்ஹம்ஸ் (உரிமம் மற்றும் இதர கட்டணங்களுக்கு 1,070 திர்ஹம்ஸ் மற்றும் துபாய் சேம்பர் உறுப்பினர் கட்டணம் 300 திர்ஹம்ஸ் ஆகியவை அடங்கும்)
- தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாடு மற்றும் உரிமத்தின் வகையைப் பொறுத்து பிற உரிமங்களுக்கான கட்டணம் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வர்த்தக உரிம சரிபார்ப்பு
ஒரு நிறுவனத்தின் வர்த்தக உரிமத்தைச் சரிபார்க்க, துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா (DET) வலைத்தளத்தைப் பார்வையிடவும், e-services க்குச் செல்லவும், ‘licence information’ஐ தேர்ந்தெடுக்கவும். நிறுவனத்தின் பெயர் (ஆங்கிலம்/அரபு) அல்லது உரிம எண் மூலம் நீங்கள் தேடலாம்.
பின்வரும் விபரங்களுடன் நிறுவனத்தின் சுயவிவரம் காண்பிக்கும்:
- உரிம நிலை
- காலாவதி தேதி
- சட்ட வகை
- தொடர்பு விவரங்கள்
- வணிக நடவடிக்கைகள்
- நேரடி முகவரி (பொருந்தினால்)
துபாயை தளமாகக் கொண்ட வணிகங்களைக் கையாளும் போது வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்த இந்த அமைப்பு உதவுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel