இந்தியாவில் இருந்து ஓமான் திரும்பும் குடியிருப்பாளர்கள் ஓமான் விமான நிலையம் வந்தடைந்தவுடன் கொரோனாவிற்கான சோதனையினை மேற்கொண்டு வந்த சூழ்நிலையில், இனி ஓமானிற்கு இந்தியாவில் இருந்து வரும் நபர்கள் ஓமான் விமான நிலையம் வந்தடைவதற்கு முன்னதாகவே கொரோனாவிற்கான நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட்டை வைத்திருக்க வேண்டும் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஓமானிற்கு இடையில் ஏர் பபுள் ஒப்பந்தத்தின் கீழ் சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியா- ஓமான் இடையே விமான சேவைகளை இயக்கி வரும் இந்தியாவிற்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமானது இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் இருந்து ஓமான் திரும்பும் குடியிருப்பாளர்கள் விமானத்தில் பயணிப்பதற்கு முன்னர் 96 மணி நேரத்திற்குள் மேற்கொண்ட கொரோனாவிற்கான PCR டெஸ்ட் ரிசல்ட்டினை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடைமுறையானது வரும் நவம்பர் 11 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கொரோனாவிற்கான PCR சோதனையை ICMR-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் இருந்து மட்டுமே பெற வேண்டும் என்றும் அந்த சோதனையானது சரிபார்க்கப்பட்டு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#FlyWithIX : Oman-bound passengers ⚠️ pic.twitter.com/3CWe2nXgdK
— Air India Express (@FlyWithIX) November 7, 2020