ADVERTISEMENT

UAE: கடலுக்குள் மூழ்கிய இந்திய குடும்பத்தின் கார்.. மணிக்கணக்கில் போராடி காரை மீட்ட குழுவினர்!!

Published: 2 May 2025, 9:27 AM |
Updated: 2 May 2025, 10:04 AM |
Posted By: Menaka

அபுதாபி, துபாய் எல்லைக்கு அருகில் இருக்கும் கந்தூத் பகுதியில் உள்ள கடற்கரையில் கேம்பிங் சென்ற ஒரு குடும்பத்தின் கார் கடலுக்குள் இழுத்துசெல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தகவலை அறிந்த மீட்புக்குழுவினர் மணிக்கணக்கில் போராடி காரை கடலில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

கந்தூத் (Ghantoot) கடற்கரையில் கேம்பிங் சென்றிருந்த ஒரு இந்திய குடும்பத்தினர் கடற்கரைக்கு மிக அருகில் அவர்களின் Nissan Patrol SUV காரை நிறுத்தி விட்டு  தூங்கியுள்ளனர். இந்நிலையில் இரவு முழுவதும் அலை உயர்ந்து, தண்ணீருக்கு மிக அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் கார் உள்ளே இழுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர்கள் கண் விழித்து பார்க்கும்போது ஞாயிற்றுக்கிழமை காலை கடலில் பாதிக்கு மேல் அவர்களின் கார் மூழ்கியது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

அதையடுத்து, என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப்போன குடும்பத்தினர், உதவிக்காக இன்ஸ்டாகிராம் மூலம், துபாயில் நன்கு அறியப்பட்ட ஆஃப்-ரோடு மீட்பரான அஹ்மத் ஹிஸ்கோலை தொடர்பு கொண்டு பிரச்சினையை தெரிவித்துள்ளனர். முதலில், இதனை யாரோ விளையாடுவதாகவும் உண்மை இல்லை என்று நினைத்ததாகவும், ஆனால் அது ஒரு தீவிரமான சூழ்நிலை என்பதை விரைவாக உணர்ந்ததாகவும் அஹ்மத் கூறியுள்ளார்.

பின்னர் அஹ்மத், அவரது மனைவி நோரா, மற்றும் சக மீட்புப் பணியாளர்கள் அய்ஹாம் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் தங்கள் உபகரணங்களை பேக் செய்து காலை 8:45 மணியளவில், கந்தூத்தை அடைந்துள்ளனர். கார் ஏற்கனவே கரையில் இருந்து 40 மீட்டர் தொலைவில் மிதந்து கொண்டிருப்பதையும், சுமார் 5 மீட்டர் ஆழமுள்ள நீரில் முழுமையாக மூழ்கியிருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்த குழுவினர், காலை 9:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை போராடியதாக கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

ஒரு கட்டத்தில், இரண்டு கார்களை பயன்படுத்தி நீருக்குள் மூழ்கிய காரை வின்ச் கேபிள் (winch cable) மூலம் இழுப்பதற்கு முயற்சித்துள்ளனர். அழுத்தம் காரணமாக ஒரு வின்ச் கேபிள் (winch cable) அறுந்து அவர்களின் மீட்பு பணியை சவாலாக்கியுள்ளது. அந்த தடையையும் தாண்டி மீண்டும் கடினமாக முயற்சித்து நீருக்குள் மூழ்கியிருந்த காரை இழுத்து தரைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர்.

அதிர்ஷ்டவசமாக, கடற்பரப்பு பாறையாக இருந்தது, மணல் நிறைந்ததாக இல்லை, இது கார் ஆழமாக மூழ்குவதையோ அல்லது மோசமாக சேதமடைவதையோ தடுத்தது என்று அகமது விளக்கியுள்ளார். எல்லா சாத்தியக்கூறுகளையும் மீறி, அஹ்மது மற்றும் அவரது குழு பாதுகாப்பாக காரை மீட்டுள்ளது.

இந்த மீட்புப்பணியை மேற்கொண்ட லெபனானைச் சேர்ந்த அஹ்மது மற்றும் அவரது மனைவி நோரா ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்கின்றனர். இருந்தபோதிலும் இந்த குறிப்பிட்ட மீட்புபணியானது அதன் சிரமம் மற்றும் குழுப்பணி காரணமாக மிகவும் சவாலானதாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ahmad Hiskol (@bluerex_offroadrescue)

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel