ADVERTISEMENT

அமீரகத்தில் ஈத் அல் அதா தொழுகைக்கான நேரங்கள் வெளியீடு!!

Published: 1 Jun 2025, 7:23 PM |
Updated: 1 Jun 2025, 9:01 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஈத் அல் அதா பெருநாளைக் கொண்டாட நான்கு நாள் பொது விடுமுறையை அறிவித்துள்ள நிலையில், நாட்டில் உள்ள குடியிருப்பாளர்கள் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்காக பெரும் ஆவலுடன் தயாராகி வருகின்றனர்.

ADVERTISEMENT

அமீரக அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, வருகின்ற ஜூன் 5, வியாழக்கிழமை அரஃபா தினம் தொடங்கி ஜூன் 8, ஞாயிற்றுக்கிழமை வரை பொது விடுமுறை தொடரும், பின்னர் ஜூன் 9, திங்கள் அன்று வழக்கமான வேலைநாட்கள் மீண்டும் தொடங்கும். “தியாகப் பெருநாள்” என்றும் அழைக்கப்படும் ஈத் அல் அதா, இந்த ஆண்டு ஜூன் 6 வெள்ளிக்கிழமை வருகிறது.

இந்த ஆண்டு, ஈத் பண்டிகை வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையுடன் ஒத்துப்போகிறது, அதாவது ஈத் மற்றும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைகள் இரண்டும் ஒரே நாளில் அவற்றின் நியமிக்கப்பட்ட நேரங்களில் தனித்தனியாக நடைபெறும்.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் முழுவதும் தற்காலிக ஈத் தொழுகை நேரங்கள்:

  • அபுதாபி: அதிகாலை 5:50 மணி
  • துபாய்: அதிகாலை 5:45 மணி
  • ஷார்ஜா : அதிகாலை 5:44 மணி
  • அஜ்மான்: அதிகாலை 5:44 மணி
  • உம் அல் குவைன்: அதிகாலை 5:43 மணி
  • ராஸ் அல் கைமா & ஃபுஜைரா: அதிகாலை 5:41 மணி

மேற்கூறியவை ஹிஜ்ரி நாட்காட்டியின் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்பட்ட சாத்தியமான நேரங்கள் ஆகும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் அடிப்படையில் இறுதி நேரங்கள் புதுப்பிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT