அமீரகத்தில் ஈத் அல் அதாவை முன்னிட்டு ஜூன் 5, வியாழக்கிழமை முதல் ஜூன் 8, ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள் வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அமீரகக் குடியிருப்பாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் பண்டிகையைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அமீரகத்தில் ஈதை முன்னிட்டு வாணவேடிக்கை நிகழ்வுகளும் நடத்தப்படவுள்ளன. அமீரகம் முழுவதும் நடத்தப்படும் சிறந்த வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் குறித்த விபரங்களை கீழே காணலாம்.
துபாய்
துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் – ரிவர்லேண்ட் துபாய் (Riverland Dubai at Dubai Parks and Resorts)
இங்கு வானவேடிக்கை காண முழு தீம் பார்க் டிக்கெட்டை வாங்க வேண்டிய அவசியமில்லை, இதற்கு 295 திர்ஹம்ஸ் செலவாகும். நான்கு தீம் பூங்காக்களையும் இணைக்கும் பகுதியான ரிவர்லேண்ட் துபாயிலிருந்து வாணவேடிக்கைகளை ரசிக்கலாம்.
- தேதிகள்: ஜூன் 5 மற்றும் 6
- நேரம்: இரவு 9 மணி
- நுழைவு: வாணவேடிக்கைகளைப் பார்க்க இலவசம்
- ரிவர்லேண்டிற்கு நுழைவு: வாணவேடிக்கை நிகழ்ச்சி இலவசம் என்றாலும், ரிவர்லேண்டிற்கான நுழைவுச் சீட்டுகளுக்கு ஒருவர் கட்டணம் செலுத்த வேண்டும். ரிவர்லேண்ட் துபாய்க்கான என்ட்ரி டிக்கெட்டானது கவுண்டரில் 20 திர்ஹம்ஸ் ஆகும், இதை உணவு மற்றும் பானங்களுக்குப் (food and beverages ) பயன்படுத்தலாம். ஆன்லைன் டிக்கெட்டுகள் 15 திர்ஹம்சிற்கு கிடைக்கின்றன, ஆனால் அவற்றை உணவு அல்லது பானங்கள் வாங்க பயன்படுத்த முடியாது.
அபுதாபி
அபுதாபியில் உள்ள இந்த முக்கிய இடங்களில் வாணவேடிக்கைகளை காணலாம்:
- யாஸ் பே வாட்டர்ஃபிரண்ட் (Yas Bay Waterfront): ஜூன் 6–8, இரவு 9 மணி
- கார்னிச் (The Corniche): ஜூன் 6, இரவு 9 மணி
- ஹஸ்ஸா பின் சையத் ஸ்டேடியம் (அல் அய்ன்) (Hazza Bin Zayed Stadium, Al Ain): ஜூன் 6, இரவு 9 மணி
ஷார்ஜா
- அல்ஜதா (Aljada) குடியிருப்புகள்
- தேதி: வெள்ளிக்கிழமை, ஜூன் 6
- நேரம்: இரவு 8 மணி
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel