ADVERTISEMENT

UAE: புதிய கட்டண பார்க்கிங் இடங்களை அறிமுகப்படுத்திய அஜ்மான்!!

Published: 22 Jun 2025, 6:19 PM |
Updated: 22 Jun 2025, 6:31 PM |
Posted By: Menaka

ஜூன் 21 சனிக்கிழமை முதல், அஜ்மான் நகரத்தின் பல முக்கிய பகுதிகளில் புதிய பார்க்கிங் கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 1,263 புதிய கட்டண வாகன நிறுத்துமிடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அஜ்மான் முனிசிபாலிட்டி X தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய பார்க்கிங் இடங்கள் அமைந்துள்ள பகுதிகள்

  • ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுவைமி ஸ்ட்ரீட் (கார்டன் சிட்டி டவர்ஸுக்கு அருகில்)
  • ஷேக் ரஷீத் பின் சயீத் அல் நுவைமி ஸ்ட்ரீட் (அஜ்மான் பேர்ல் டவர்ஸுக்கு அருகில்)
  • அல்-பரா பின் மாலிக் ஸ்ட்ரீட்
  • ஒசாமா பின் ஜைத் ஸ்ட்ரீட்

போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் எமிரேட் முழுவதும் சிறந்த பார்க்கிங் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் முனிசிபாலிட்டியின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது. வெள்ளிக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் அஜ்மானில் பார்க்கிங் இலவசமாகும்.

இதே போல் இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஷார்ஜாவானது அல் தைத் சிட்டியில் கட்டண பார்க்கிங் இடங்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி ஜனவரி 1, 2025 முதல், சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்க்கிங் கட்டணம் அமலுக்கு வந்தது. வெள்ளிக்கிழமைகளில் பார்க்கிங் இலவசம். இதே போன்று துபாயிலும், பொது பார்க்கிங் A, B, C மற்றும் D மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, பிரீமியம் மண்டலங்கள் இப்போது AP, BP, CP மற்றும் DP என பெயரிடப்பட்டுள்ளன. வார விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர, போக்குவரத்து உச்ச நேரங்களில் (காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை) பிரீமியம் இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 6 திர்ஹம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel