ADVERTISEMENT

அமீரக தேசிய தினத்தையொட்டி 472 கைதிகளுக்கு விடுதலை அளித்த துபாய் ஆட்சியாளர்..!!

Published: 26 Nov 2020, 3:42 PM |
Updated: 26 Nov 2020, 3:42 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் 49-வது தேசிய தினத்தை முன்னிட்டு 472 கைதிகளுக்கு விடுதலை அளிப்பதாக அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

விடுதலை செய்யப்படவிருக்கும் கைதிகள் பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்கள் என்று அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் (WAM) கூறியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், ஐக்கிய அரபு அமீரக தலைவர் மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் 628 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து, உம் அல் குவைன் மற்றும் அஜ்மான் ஆட்சியாளர்களும் கைதிகளுக்கு விடுதலை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT