ADVERTISEMENT

பல இடங்களில் புதிய கட்டண பார்க்கிங் மண்டலங்களை செயல்படுத்திய அபுதாபி!!

Published: 10 Jul 2025, 7:04 PM |
Updated: 10 Jul 2025, 7:04 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் இன்று (ஜூலை 10, வியாழக்கிழமை) முதல் தலைநகர் அபுதாபி முழுவதும் பல இடங்களில் புதிய மவாகிஃப் கட்டண பார்க்கிங் மண்டலங்கள் செயல்படுத்தப்படுவதாக ‘Q Mobility’  அறிவித்துள்ளது. போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் பொது வாகன நிறுத்துமிடங்களை மிகவும் திறமையாக பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும் நகரத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. புதிதாக செயல்படுத்தப்பட்ட மண்டலங்களில் பின்வருவன அடங்கும்:

ADVERTISEMENT
  • ஈஸ்டன் மாங்குரோவ்ஸ் (Eastern Mangroves)
  • டால்ஃபின் பார்க் (Dolphin Park)
  • அல் கலீஜ் அல் அரபி பூங்கா பிரிவுகள் 1, 2, 4, மற்றும் 5 (Al Khaleej Al Arabi Park 1, 2, 4, and 5)
  • அல் குர்ம் பிளாசா (Al Qurm Plaza)

Q மொபிலிட்டியின் கூற்றுப்படி, கர்ப் பெயிண்டிங் (curb painting), திசை அடையாளங்களை நிறுவுதல் மற்றும் பொது விழிப்புணர்வு அடையாளங்கள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்பு பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து புதிய மண்டலங்கள்  செயல்படுத்தப்படுகிறது. வாகன இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் எமிரேட் முழுவதும் பார்க்கிங்கை ஒழுங்குபடுத்துவதற்கும் அபுதாபியின் பரந்த உத்தியுடன் இந்த முயற்சி ஒத்துப்போகிறது.

எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் அடையாளங்களில் காட்டப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும், ‘Darb’ செயலி உட்பட டிஜிட்டல் கட்டண விருப்பங்களைப் பயன்படுத்தவும், விதிமீறல்களைத் தவிர்க்கவும் Q மொபிலிட்டி வலியுறுத்தியுள்ளது. இத்தகைய மவாகிஃப்பின் விரிவாக்கம், அபுதாபி ஐலேண்ட்ஸ் முழுவதும் போக்குவரத்து நிர்வாகத்தை ஆதரிப்பதோடு, ஒட்டுமொத்த பார்க்கிங் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel