ADVERTISEMENT

UAE: டிசம்பர் 31 வரை பொதுமன்னிப்பு நீட்டிப்பு..!! கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து ICA விளக்கம்..!!

Published: 3 Dec 2020, 10:30 AM |
Updated: 3 Dec 2020, 10:32 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா விதிமீறலில் ஈடுபட்டு சட்டத்திற்கு புறம்பாக அமீரகத்தில் தங்கி வரும் வெளிநாட்டினருக்காக இந்த வருடம் வழங்கப்பட்ட பொது மன்னிப்பானது இந்த வருடம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசு வழங்கியுள்ள இந்த சலுகைக் காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறவுள்ள வெளிநாட்டினர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) இன்று விளக்கியுள்ளது.

ADVERTISEMENT

ICA தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ரெசிடென்ஸ் சட்டங்களை மீறி அமீரகத்தில் வசிக்கும் நபர்கள் அனைத்து அபராதங்கள் மற்றும் பிற நிர்வாக கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு பெற முடியும் என்றும், எனினும் இது மார்ச் 1 க்கு முன்னர் காலாவதியான விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அபராத விலக்கு பெறுவதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசா விதியினை மீறிய நபர்கள் டிசம்பர் 31 க்கு முன்னர் நாட்டை விட்டு புறப்பட வேண்டும் என்றும் அதற்கான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து புறப்படும் நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட்டுடன் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா விமான நிலையங்களில் இருந்து பயணம் செய்யும் மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் காலாவதியான விசிட் விசா வைத்திருப்பவர்கள் பார்வையிடவும், பொது மன்னிப்புத் திட்டத்தின் மூலம் சலுகை பெறுவதற்கு புறப்படும் நேரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்தை அடைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, துபாய் மற்றும் அல் மக்தூம் விமான நிலையங்கள் வழியாக பயணிப்பவர்கள் புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் துபாய் சிவில் ஏவியன் பாதுகாப்பு மையத்திற்கு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசா விதிமீறலில் ஈடுபட்டவர்களின் ஸ்பான்சர்ஷிப்பில் தங்கி இருப்பவர்களும் அவர்களுடன் சேர்ந்து பொது மன்னிப்பின் மூலம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT