ADVERTISEMENT

அபுதாபி: அனைத்து செயல்பாடுகளும் இரண்டு வாரங்களில் முழுமையாக இயங்க அனுமதி..!! கொரோனாவினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்..!!

Published: 9 Dec 2020, 11:12 AM |
Updated: 9 Dec 2020, 11:17 AM |
Posted By: admin

கொரோனா தொற்றுநோய்க்கான அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு அபுதாபியில் உள்ள அனைத்து பொருளாதார, சுற்றுலா, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் கொரோனாவிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் வெற்றியைத் தொடர்ந்தும், கொரோனாவிற்கான உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் எண்ணிக்கை குறைந்த விகிதத்திலேயே தொடர்ந்து இருப்பதாலும் இரு வாரங்களுக்குள் அனைத்து நடவடிக்கையையும் முழுமையாக தொடங்க அனுமதி வழங்கப்பட இருப்பதாக பேரிடர் மேலாண்மைக்குழு அபுதாபி அரசு ஊடக அலுவகத்தின் வாயிலாக தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஏற்கனவே உள்ள முன்னெச்சரிக்கை நடைமுறைகள் அனைத்தும் சுகாதார நோக்கத்திற்காக தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்வதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் அக்குழு தெரிவித்துள்ளது. இதில் சோதனைத் திட்டங்கள், சமூக ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதற்கான மனிதாபிமான முயற்சிகள் போன்றவை அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா பரவலுக்குப் பிறகு, மக்கள் ஒன்றாக கூடக்கூடிய பல்வேறு செயல்பாடுகளுக்கு தடை விதித்து அபுதாபி அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பின்னர் செப்டம்பர் முதல், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் சமூக விலகல் மற்றும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளுடன் படிப்படியாக நடத்த இதுவரையிலும் அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT