ADVERTISEMENT

அமீரகத்தில் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் என்ன தண்டனை..?? புதிய போக்குவரத்துச் சட்டம் என்ன சொல்கிறது??

Published: 19 Aug 2025, 6:51 PM |
Updated: 19 Aug 2025, 6:51 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது எப்போதுமே கடுமையான குற்றமாகவே இருந்து வருகிறது, ஆனால் கடந்த மார்ச் மாதம் அமலுக்கு வந்த புதிய கூட்டாட்சி விதிமுறைகள் தண்டனைகளை இன்னும் கடுமையாக்கியுள்ளன. போக்குவரத்து ஒழுங்குமுறை குறித்த 2024 ஆம் ஆண்டின் 14 ஆம் எண் கூட்டாட்சி சட்டம் உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் உத்தி மற்றும் காவல்துறை உத்தரவுகளின் ஒரு பகுதியாக புதுப்பிக்கப்பட்ட சட்டம் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

புதிய விதிகளின் கீழ், ஐக்கிய அரபு அமீரகத்தில் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு உரிமத்துடன் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளின் முதல் குற்றத்திற்கு திர்ஹம் 2,000 முதல் திர்ஹம் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் 5,000 திர்ஹம்ஸ் முதல் 50,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும்.

எந்தவொரு உரிமமும் இல்லாமல் அல்லது சம்பந்தப்பட்ட வாகனத்தை இயக்க அனுமதிக்காத வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், 5,000 முதல் 50,000 திர்ஹம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மீண்டும் மீண்டும் தவறு செய்தால், அபராதங்கள் கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக, குற்றவாளிகள் குறைந்தது மூன்று மாதங்கள் கட்டாய சிறைத்தண்டனை மற்றும் 20,000 முதல் 100,000 திர்ஹம் வரை அபராதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT