நீங்கள் அபுதாபிக்கு வாகனம் ஓட்ட திட்டமிட்டால், அதன் போக்குவரத்து விதிமுறைகளைப் பற்றி அறிந்திருப்பது அவசியம். அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளை விட சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் விபத்துகளைக் குறைத்தல் போன்ற கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிக்கு இணங்கத் தவறினால் கடுமையான அபராதங்கள், பிளாக் பாயிண்ட்ஸ் அல்லது வாகன பறிமுதல் கூட ஏற்படலாம். இதனால் அபுதாபியில் வாகனம் ஓட்டும் போது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய போக்குவரத்து விதிமுறைகள் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
வேக வரம்புகள்
பெரும்பாலான எமிரேட்களில் சாலைகளில் குறிக்கப்பட்டிருக்கும் ஓட்டுநர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வேக வரம்புகளை விட 20 கிமீ/மணி கூடுதல் வரம்பு வழங்கப்படுகிறது. அதாவது 100 கிமீ வேக வரம்பு குறிக்கப்பட்ட சாலைகளில் வாகன ஓட்டிகள் 120 கிமீ வரை செல்லலாம். ஆனால், அபுதாபி 2018 இல் இந்த நடைமுறையை ரத்து செய்தது. இங்கே, நியமிக்கப்பட்ட வேக வரம்பை 1 கிமீ கூட மீறுவது நேரடியாக அபராதத்திற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது 100 கிமீ வரம்புகள்ள சாலைகளில் 101 கிமீ சென்றால் கூட அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலை எச்சரிக்கை அமைப்பு
சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, அபுதாபி அதன் நெடுஞ்சாலைகளில் வண்ண-குறியிடப்பட்ட சாலை எச்சரிக்கை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒளிரும் சிக்னல்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் 200 மீட்டர் தொலைவில் இருந்தும் தெரியும்:
- சிவப்பு மற்றும் நீல ஒளிரும் விளக்குகள்: முன்னால் ஒரு விபத்து ஏற்பட்டதை குறிக்கின்றன, எனவே ஓட்டுநர்கள் மெதுவாகச் சென்று எச்சரிக்கையாக இருக்க தூண்டுகின்றன.
மஞ்சள் ஒளிரும் விளக்குகள்: மூடுபனி, தூசி அல்லது மழை போன்ற ஆபத்தான வானிலை மற்றும் பிற சாத்தியமான சாலை விபத்துகள் குறித்து எச்சரிக்கிறது.
இந்த முன்னெச்சரிக்கை அமைப்பு ஓட்டுநர்கள் அபாயங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும் அதற்கேற்ப தங்கள் ஓட்டுதலை சரிசெய்யவும் உதவுகிறது.
AI- இயங்கும் போக்குவரத்து ரேடார்கள் மற்றும் கேமராக்கள்
போக்குவரத்து கண்காணிப்பிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் அபுதாபி முன்னணியில் உள்ளது. மேம்பட்ட ரேடார்கள் மற்றும் கேமராக்கள் இப்போது நிகழ்நேரத்தில், குறிப்பாக பாதசாரிகள் கடக்கும் இடங்கள், இன்டர்செக்ஷன்கள் மற்றும் சாலை exit இடங்களில் மீறல்களைக் கண்டறிகின்றன.
முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- EXIT-I சூரிய சக்தியில் இயங்கும் சாதனங்கள்: பாதசாரிகளுக்கு வழிவிடத் தவறும் ஓட்டுநர்களைக் கண்டறிந்து, சட்டவிரோதமாக முந்திச் செல்வது, போக்குவரத்தைத் தடுப்பது மற்றும் exit இடங்களில் வரிசையில் நிற்காமல் செல்வது போன்ற மீறல்களைப் பிடிக்கின்றன.
- VAST உடன் நடத்தை கண்காணிப்பு: வாகன கவனம் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு (VAST-Vehicular Attention and Safety Tracker) கவனத்தைச் சிதறடித்து வாகனம் ஓட்டுதல், மொபைல் போன் பயன்பாட்டைக் கண்டறிதல், கவனக்குறைவான நடத்தை மற்றும் திடீர் வளைவு ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது.
பாதுகாப்பான சாலைகளுக்கான ஸ்மார்ட் கேட்ஸ்
அபுதாபி முழுவதும் உள்ள ஸ்மார்ட் கேட்ஸ் இரட்டை நோக்கங்களுக்கு சேவை செய்கின்றன – விபத்துக்கள் அல்லது வானிலை பற்றிய செய்தி எச்சரிக்கைகளை வழங்குகின்றன. அத்துடன் அவை தானாகவே கீழ்க்கண்ட மீறல்களை பதிவு செய்கின்றன:
- வேக வரம்பு மீறல்கள்
- காலாவதியான பதிவு கொண்ட வாகனங்கள்
- டெயில்கேட்டிங் அல்லது பாதுகாப்பான தூரத்தைக் கடைப்பிடிக்கத் தவறியது போன்ற பாதுகாப்பற்ற ஓட்டுநர் நடைமுறைகள்
அபுதாபியின் கடுமையான வேக விதிகள், AI- இயக்கப்படும் கண்காணிப்பு மற்றும் நிகழ்நேர எச்சரிக்கைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அமைப்பு பாதுகாப்பான சாலைகளுக்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வாகன ஓட்டிகளுக்கு, இந்த விதிமுறைகளைப் புரிந்துகொள்வதும் மதிப்பதும் மிக முக்கியமானது. எனவே அபுதாபியில் வாகனம் ஓட்டும் போது இதனை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel